Editorial / 2021 ஜூன் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.
இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.




35 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
9 hours ago