Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் - அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் பிரசன்வீரவர்தன ஒப்பமிட்டு இவ்விடயம் தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“ஜனாதிபதி, ஏறாவூருக்கு அண்மையில் விஜயம் செய்தவேளை, அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின்னர் அம்மைதானம் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மைதானத்தை துப்பரவுசெய்து தரும் விடயத்தில் தங்களது அவதானத்தைச் செலுத்துமாறு”, கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர், எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago