2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு கூட்டெரு தயாரிப்பு செயன்முறை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட மாங்காடு கிராமத்தில் அப்பகுதி விவசாயிகளுக்கு இயந்திரத்தின் மூலம் கூட்டெரு தயாரிப்பதற்குரிய செயன்முறை, இன்று (11) செய்துகாட்டப்பட்டது.

இதன்போது, களுதாவளை விவசாயப் போதனாசிரியர் பி.சிறிபவன் மற்றும்  செட்டிபாளையம் விவசாயப் போதனாசிரியர் எம்.குணமகராஜா ஆகியோரால் விவசாயிகளுக்குரிய விளக்கங்களும், தெழிவூட்டல்களும் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டெரு தயாரிப்பு செயன்முறையில், அப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X