2025 மே 15, வியாழக்கிழமை

விவாக, பிறப்பு, இறப்புப் பதிவுகளை இணைய வசதி மூலம் வழங்குதல்

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ். எம். நூர்தீன், எச்.ஏ. ஹுஸைன்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிகழ்ந்த விவாக, பிறப்பு, இறப்புப் பதிவுகளை, இணைய வசதிமூலம் வழங்கும் திட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், முதல் தடவையாக கணினி வலையமைப்பூடாக, இலங்கையின் எப்பாகத்திலும் பதிவு செய்துள்ள பொதுமக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்புப் பதிவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மேலதிகப் பதிவாளர் நாயகமுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

பொதுமக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் காலம், பண விரயத்தைத் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்றிட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது விடயமாக மேலும் தெரிவித்த மாவட்ட செயலாளர், “தற்போது அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்  விவாக, பிறப்பு, இறப்புப் பதிவுகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதியளிக்கப்பட்டுள்ளது. ‪

“1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை திங்கட்கிழமை முதல், வார நாள்களில் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .