Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான்
“மத்திய கிழக்குக்குச் சென்று துன்பங்களை அனுபவிப்பதை விட வீடுகளிலிருந்தே சிறு தொழில்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டலாம்” என விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் யுவதிகளுக்கு விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில், “கிராமங்களுக்கு தொழில் வழிகாட்டல்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக தொழில் வழிகாட்டல் செயல்முறைப் பயிற்சி, கரவெட்டி, நாவற்காடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் விக்னேஸ்வரன் தொடர்ந்து பேசுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிலற்று வீடுகளில் இருக்கும் அதிகமான பெண்கள், தமது வீட்டு வேலைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர்.
“அந்த நேரத்தில் சில மணிநேரத்தை ஒதுக்கி, இவ்வாறாக சிறுகைத்தொழில்களை மேற்கொள்வார்களானால் மாதாந்தம் பொருந்தொகையை வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும்.
“அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அங்கு போதிய சம்பளங்கள் இல்லாமலும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்து பணம் மீட்டுகின்றனர்.
சிலர் வெறுங்கையோடு பாதிக்கப்பட்டு திரும்புகின்றனர்.
இவ்வாறெல்லாம் துன்பங்களை அனுபவிக்காமல் சொந்த வீடுகளிலே, உறவுகளுடன் இருந்துகொண்டு, போதிய வருமானத்தை ஈட்டக்கூடிய இதுபோன்ற கைத்தொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்திக்கௌள்ள வேண்டும்” என்றார்.
பிரதேச விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் சுனித்தா அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர்களான வளர்மதி நிரஞ்சன், சமூக சேவகர் எம். சிறிஸ்காந்தராஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. அருணா, விதாதா வள நிலைய கள இணைப்பாளர் பி. சுகுணரூபன் உள்ளிட்டோரும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025