2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீடுகளை அமைப்பதற்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, தீஷான் அஹமட் 

 

கிழக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான மானிய கொடுப்பனவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று  (25) நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட 66 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், காசோலைகளை வழங்கி வைத்தார்.

முதலமைச்சின் கீழுள்ள வீடமைப்பு அதிகார சபையால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பயனாளிகள்  தெரிவுசெய்யப்பட்டு, காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி, உறுப்பினர்களான கே.எம்.ரஷாக் ஜவாத், ஐ.எல்.மாஹீர், ஏ.எல்.தவம், மெத்தானந்த சில்வா,மஞ்சுள பெர்ணாண்டோ, அருண சிறிசேன ஆகியோருடன் வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.எல்.ஹமீட் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .