2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு வன்முறைகள் தொடர்பில் அவதானம்

Princiya Dixci   / 2021 மே 12 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் இக்காலத்தில் வீடுகளில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளிர் அமைப்பும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் பிரிவுகளிலும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி பாலசிங்கம் சங்கீதா, மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான பொறுப்பதிகாரி என்.சுசீலா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.

வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பும் வகையிலான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டதுடன், குடும்ப வன்முறைகள் குறித்தான விழிப்புணர்வுகளும் அது தொடர்பில் தொடர்புகொள்ளவேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிவுறுத்தல்களில் வழங்கப்பட்டன.

இதன்போது வீட்டில் உள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துவது மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X