2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பித்தல்

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டு. துஷாரா -

உலக சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு,  'பூலோகம் ஒரே ஒரு குடிமனை'எனும் தொனிப்பொருளில் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் நோக்கில்,  வீட்டுத்தோட்டம் அமைக்கும் விழிப்புணர்வுகளுடன், வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால்,  பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.  

கடந்த ஒரு வாரகாலமாக கொண்டாடப்பட்டு வந்த உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் தொடர்பில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் கீழுள்ள 45 கிராம சேவகர் பிரிவுகளில் 225 விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்களிடத்தில் நடாத்தி வைக்கப்பட்ட  அதேவேளை, அப்பிரிவு மக்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான விதைகளும்,  மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டு வீட்டுத் தோட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறிப்பாக, கட்டடம் அமைந்துள்ள பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை ஆரம்பித்தல், பிரதேச செயலக பசுமைக்கழக உறுப்பினர்களால் வருடாந்தம் வெளியிடப்படும் சுற்றாடல் செய்திமடல் வெளியீடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் தொடர்பில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், வீட்டுத்தோட்டம் செய்வதற்கான மரக்கன்றுகள் மற்றும் விதைகள் போன்வை பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பசுமைக் கழக உறுப்பினர்கள், கிராம சேவனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X