Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறுகோரி இன்று(29) செங்கலடி நகரில் வீதிமறியல் போராட்டம்.
போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடான போக்குவரத்து சில நிமிடங்கள் தடைப்பட்டது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் செங்கலடி நகரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர செங்கலடி வீதியூடாக செல்லும்போது வழிமறித்த தமிழ் உணர்வாளர் அமைப்பினர், பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யவதற்கு ஜனாதிபதியூடாக நடவடிகையெடுக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில், குறித்த தொழிற்சாலை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு இன்னும் இரண்டு தினங்களில் ஏற்பாடு செய்துதருவதாக உறுதியளித்தார்.
32 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago