Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 31 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருள்களுடன் கைதானவர்களை, எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இன்று (31) உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மட்டக்களப்பு,ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
குறித்த முகாமில் சஹ்ரானின் சகோதரர் தங்கியிருந்ததாகவும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்தனர்.
இதனடிப்படையில் நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த ஆறு பேர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நான்கு பேர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் நிகவரெட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேரும் இன்று குற்றத்தடுப்புப் பிரிவினரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மார்ச் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago