2025 மே 14, புதன்கிழமை

‘வெட்டுப்புள்ளி வழங்கியமையில் இனப்பாகுபாடு அரங்கேற்றம்’

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாண சபை அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான போட்டிப் பரீட்சையில், திறமையின் அடிப்ப​டையில் இன்றி, இனரீதியாக அதிகப் படியான வெட்டுப்புள்ளியைத் தமிழர்களுக்கு வழங்கி, தொழில் ரீதியாக இனப்பாகுபாடுச் செய்துள்ளதாக, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கண்டனம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (15) இரவு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துவரும் தமிழர்களுக்கு தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையால் இனரீதியாக அநீதிகள் இழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றார்.

கிழக்கு மாகாண சபையால் அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான வெட்டுப் புள்ளியாக பெரும்பான்மையினருக்கு 105 புள்ளிகளும், முஸ்லிம்களுக்கு 120 புள்ளிகளும், தமிழர்களுக்கு 130 புள்ளிகளையும் இனரீதியாக வழங்கப்பட்டுள்ளமை தமிழர்களுக்கான துரோகம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி செயலணி அபிவிருத்தி கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு இன்று (17) கொண்டுவரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .