2025 மே 01, வியாழக்கிழமை

வெருகல் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன்

மட்டக்களப்பு - வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், இன்று (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.  

இவர், வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைப்பயிர் செய்கை செய்துவருவதாகவும் வழமைபோல சம்பவதினமான இன்று காலை தோணியில் பயிர்ச் செய்கை பகுதிக்கு ஆற்றில் ஊடாக தனிமையில் பயணித்தபோது, தோணி கவிழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .