2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் உதவிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம் 

இலங்கை சுற்றுலாத்துறை நிபுணர்களுக்கான தேசிய சங்கத்தின் குழுவினர்கள், நாடு முழுவதும் உள்ள உல்லாச விடுதிகளில் நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பார்வையிட்டு, உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை சுற்றுலாத்துறை நிபுணர்களுக்கான தேசிய சங்கம், இலங்கை சுற்றுலா பொலிஸ் பிரிவுடன் இணைந்து “சுற்றுலா பேரழிவு, கண்காணிப்பு, ஹோஸ்டிங் திட்டம்” என்ற தொனிப்பொருளில் வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடா உல்லா விடுதிகளில் நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நேற்று (23) மாலை சந்தித்து உலர் உணவு பொதிகளை வழங்கியதுடன், தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வது, அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்களை அடையாளம் காண்பது, உதவிகளை வழங்குதல் போன்றவற்றை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X