Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவந்த மழை காரணமாக மாவட்டத்தின் கிரான், வவுணதீவு, பட்டிப்பளை ஏறாவூர்பற்று உள்ளிட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மட்டக்களப்பு முகத்துவாரம் இன்று(08) பகல் வெட்டப்பட்டது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மாவட்டத்தின் தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ளப்பாதிப்பால், சுமார் 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர மேயர் தி.சரணவபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதரசினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், அதிகாரிகளும் முகத்துவாரம் வெட்டப்படும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025