2025 மே 14, புதன்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு உலருணவு விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும்  மிச்நகர், ஹிஸ்புல்லாஹ் நகர், மீராகேணி, தாமரைக்கேணி, சத்தாம் ஹுஸைன், ஸம்ஸம் கிராமம், ஸக்காத் கிராமம், ஐயங்கேணி உள்ளிட்ட கிராமங்களில் வாழும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, உலர் உணவு நிவாரணம் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் நஸீர் ஹாபிஸ்  பௌண்டேஷன் அறக்கட்டளை மூலம் இந்த உதவி ஊக்க உலருணவு விநியோகம் இடம்பெறவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 1,250 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா பருப்பு உள்ளிட்ட உலருணவுப் பொதி அடுத்த ஒரு சில தினங்களில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண விநியோகத்தின்முதற்கட்டமாக தற்போது உலருணவுப் பொதிக்கான குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், குறிப்பிட்ட கிராமங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போதும் சிரமத்துடன் காலங்கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு இதுவரை எதுவித நிவாரண உதவிகளையும் வழங்க அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவில்லை. அதனால் தனது அறக்கட்டளை மூலம் நிவாரணம் வங்க முடிவெடுத்ததாகத் தெரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .