Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் தொடரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிவாரண விநியோகம், இரண்டாம் கட்டமாக இன்றும் (03) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று, கிரான், ஏறாவூர்ப்பற்று, வாகரை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு விநியோகிக்கப்பட்ட உலருணவுப் பொதியில், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பிஸ்கெட், டின் மீன், பால்மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்கியிருந்தன.
மேலும், குடிநீர்ப் போத்தல்கள், படுக்கை விரிப்புகள், கூரைத் தகடுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், இடர் முகாமைத்துவப் பிரிவின் அலுவலர்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சர்வதேச ஞானம் அறக்கட்டளை, லைகா குழுமம் ஆகிய நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்ளை, பயனாளிகளுக்குப் பகிர்ந்தளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago