2025 மே 15, வியாழக்கிழமை

வெள்ளநீரை வெளியேற்றும் துரித நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

போரதீவுப்பற்றின் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை, மும்முரப் படுத்தப்பட்டுள்ளதாக, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார்.

மழை வெள்ளத்தில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவது தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை (09) தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தற்போது பெய்து கொண்டிருக்கும் அதிக மழை காரணமாக, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள அனைத்து தாழ் நிலங்களும் மழை நீரால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன என்றார்.

இவற்றை விட, தாழ் நிலங்களில் வாழும் மக்களின் குடியிருப்புக்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, எமது போரதீவுப்பற்று பிரதேச சபையின் மூலம் தேங்கி நிற்கும் நீரை ஆற்றுப்பகுதி நோக்கி வெளியேற்றும் நடவடிக்கை, மும்முரமாக இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று எல்லைகு உட்பட்ட தாழ்வான பகுதிகளிலுள்ள முனைதீவு, பட்டாபுரம், பழுகாமமம் கோவில்போரதீவு, வேத்துச்சேனை போன்றன பல கிராமங்களில் மழை நீர் நிரம்பியுள்ளன.

இவற்றால், அக்கிராமங்களிலுள்ள உள் வீதிகளிலும் முற்றாக நீர் நிரம்பியுள்ளதனால் கிராமங்களுக்குள்ளேயே மக்கள் போக்குவரத்து செய்வதில் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலமையைக் கருத்திற்கொண்டு, பிரதேச சபையின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .