2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைவேன் அச்சுறுத்தலுக்கு எதிராக சத்தியாக்கிரகம்

Editorial   / 2017 ஜூன் 16 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

ஏறாவூர் - எல்லை நகரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் கமலேஸ்வரன் (வயது 52) என்பவர் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னாலுள்ள சின்னப்பிள்ளையார் கோயிலில் அமர்ந்து,  சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளார்.

வெள்ளைவேன் கடத்தலுக்குப் பயந்த நிலையில் தான் உயிருக்கு அஞ்சி 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் போயிருந்ததாகவும் பின்னர் இவ்வருடம் மார்ச் மாதமளவில் நாடு திரும்பியிருந்த நிலையில் தான் குற்றவாளி என்ற தோரணையில் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் சமாதான ஐக்கிய செயற்பாட்டாளரும் நல்லாட்சியின் முக்கிய சூத்திரதாரியுமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாய்க்கவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவே தான் இத்தகையதொரு சத்தியாகச்கிரகத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் வெள்ளைவேன் கடத்தலோ, விசாரணைகளோ, அச்சுறுத்தலோ நாட்டிலுள்ள எவருக்கும் இருக்கக் கூடாது என்பதை வலியுத்தியும் தான் இந்த சத்தியாக்கிரகத்தை தன்னந் தனியனாகத் தொடங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது தனது மனைவி பிள்ளைகள் ஆகியோர் இந்தியாவில் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இவர் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X