2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்புக் கோரிய இவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்றுடன் 120ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தமது தொழில் உரிமை கோரிய போராட்டம் நான்கு மாதங்களை கடந்துள்ள நிலையில் தமக்கான எதுவித நடவடிக்கைகளையும் மத்திய மாகாண அரசாங்கங்கள் எடுக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் காணப்படுவதாகவும் தமது வேலைவாய்ப்புத் தொடர்பில் உரிய தரப்பினர் இன்னும் ஏமாற்றும் செயற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றனர்' என்றனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X