2025 மே 21, புதன்கிழமை

வைத்தியசாலை காணிக்குள் அத்துமீறல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் காணிக்குள் அத்துமீறிய கட்டட நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவர், அங்கு பெருந்தொகை கல், மண் என்பனவற்றை நிரப்பியுள்ளதால் வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் குறித்து காத்தான்குடி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபீர் தெரிவித்தார்.

இதுவிடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காத்தான்குடி வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிய சமகாலத் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் கொந்தராத்துக் காரர் ஒருவர், வைத்தியசாலையின் காணிக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மண், கல் என்பனவற்றைப் பரப்பி வைத்துள்ளார்.

இதனால் வைத்தியசாலையின் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாமலுள்ளது.

வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்கான சாத்தியவள நில அளவைகளைச் செய்ய வந்த பொறியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்படி காணியில் மண்ணும், கல்லும் நிரப்பப்பட்டுள்ளதால், தமது அளவீடுகளைச் செய்து அறிக்கை சமர்ப்பிக்க  முடியாது திரும்பிச் சென்றுள்ளனர்.

இதனையிட்டு, காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகல்,பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து கல், மண் நிரப்பப்பட்டுள்ளதைப் பார்வையிட்டுச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள மேற்படி கல்லும் மண்ணும் உடனடியாக அகற்றப்படாவிட்டால், அவற்றை அரச உடமையாக்குமாறு தான் பொலிஸாரைக் கேட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .