2025 மே 03, சனிக்கிழமை

வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடுகளில் கிருமி அழிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றியுள்ள வீடுகளுக்கு கிருமிகளை அழிக்கும் மருந்துகளைத் தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி சுகாதார அலுவலகம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை சுற்றியுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் அதனோடு அப்பகுதியிலுள்ள வீதிகளுக்கும் கிருமிகளை அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஐ.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X