Princiya Dixci / 2022 மே 23 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில், துஷாரா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர், வைத்தியசாலை விடுதி மலசலகூடத்தில் வைத்து நேற்றிரவு (22) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு மனநோயாளி என்றும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலகூடம் சென்றிருந்தார். நேடுநேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து, அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவைத் திறந்து போது, உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தி, மலசலகூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago