Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2019 ஜனவரி 08 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பிலுள்ள ஸ்டூடியோவுக்குள் இன்று (08) காலை திடீரென உட்புகுந்த பிக்கு ஒருவர், உரத்துச் சத்தமிட்டு அட்டகாசம் புரிந்துள்ளார்.
குறித்த ஸ்டூடியோவில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தையொன்றின் புகைப்படத்தைக் காட்டி, இது தனது சிறிய வயதுப் புகைப்படமெனவும் இதை நீங்கள் எவ்வாறு காட்சிப்படுத்த முடியுமெனவும் முரண்பட்டுள்ள அவர், அப்புகைப்படத்துக்கு விலை 125 ரூபாயா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தான் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப் போவதாகவும் ஸ்டூடியோ ஊழியர்களை அச்சுறுத்தி, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும், காவியுடை தரித்து அங்கு வந்த நபர், உண்மையில் பிக்கு போன்று நடந்துகொள்வில்லையென, ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவத்தை வேடிக்கை பார்த்திருந்த பொதுமக்களிடம் தான் மட்டக்களப்பைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகத் தெரிவித்து விட்டு, பிக்கு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் 119 இலக்கத்தினூடாக பொலிஸ் அவசரப் பிரிவுக்கு, ஸ்டூடியோ ஊழியர்கள் உடனடியாக அறிவித்துள்ளனர். எனினும், போலிஸார் அவ்விடத்துக்கு வருவதற்கு முன்னரே பிக்கு மேற்படி அட்டகாசம் புரிந்துவிட்டு, மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றதாக, ஊழியர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
41 minute ago