Editorial / 2021 நவம்பர் 03 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
மீறாவோடை பிரதேசத்தில் 15,850 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் மீறாவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், பல குற்றச் செயல்களில் ஏற்கெனவே சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, வாழைச்சேனை பொலிஸ் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என்பதுடன், இவர்களிடம் இருந்து 15,850 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .