2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’சிறுவர்களைப் பாதுகாக்கவும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 04 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எம்.அஹமட் அனாம்.

சிறுவர்களை துஷ்பிரயோகச் சம்பவங்களிலிருந்து  பாதுகாக்குமாறு கோரியும் துஷ்பிரயோகச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனையை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மேற்படி பகுதியிலுள்ள அறநெறிப்  பாடசாலைகள், கோவில்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மூதூர், பெரியவெளிக் கிராமத்தில் கடந்த 28ஆம் திகதி மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'சிறுவர்கள் தங்களின் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையில் சிறுவர்கள் காணப்பட  வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.  

 வாழைச்சேனை கிண்ணையடி எதிர்கால இளைஞர் முற்போக்கு அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X