2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'அயல் பாடசாலை, தரமான பாடசாலை'

Sudharshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஊவா மாகாணத்தில் 'அயல் பாடசாலை, தரமான பாடசாலை' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க ஊவா மாகாண கல்வி அமைச்சு, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வேலைத்திட்டத்தினடிப்படையில் மாகாணத்தின் கல்வி வலயமொன்றின் நான்கு பாடசாலைகளை தெரிவுசெய்து, அப்பாடசாலைகளை துரிதமாக அபிவிருத்தி செய்து தரமான பாடசாலைகளாக மாற்ற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கான அனுமதியை, மத்திய கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் அடுத்த வருட முற்பகுதியில், மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் மாகாண முதலமைச்சரான கல்வி அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். மேலும், தொழில்நுட்பவியலில் டிப்ளோமா பட்டம் பெற்ற 90 பேர் ஊவா மாகாணத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு ஆசிரிய நியமனங்களைப் பெற்றுக்கொடுக்கவும், விஞ்ஞானம், கணிதம், இரசாயனவியல் மற்றும் பொறியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை  நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .