2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆட்சிமாற்றம் தவறானது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

'சத்திய கடதாசிகள் மூலம் பெரும்பான்மை பலத்தைக் காட்டி ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியமை தவறான செயல் என்பதாலே நான் இவ்விடயத்தில் தலையிடவில்லை' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னிடம் கூறியதாக, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

ஊவா மாகாண இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கலாசார அமைச்சராக, சாலிய சுமேத சில்வா, புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'கடந்த வருடம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் ஊவா மாகாண ஆட்சியை மக்கள் ஒப்படைத்தனர். மக்களின் ஆணையை சத்திய கடதாசிகள் மூலம் மாற்றியமைத்து, ஐக்கிய தேசியக் கட்சி தவறான வகையில் ஊவா மாகாண ஆட்சியைப் பறித்துக் கொண்டது. இதனை கண்டித்து நான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததோடு, போராட்டங்களையும் நடாத்தினேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்று நான், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினேன். அதையடுத்து, எமது கட்சியின் தலைவரான ஜனாதிபதியிடம்  சென்று ஊவா மாகாண மக்களின் ஆணைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், மாகாண ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடமே, ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து ஊவா மாகாண மக்களின் ஆணைக்கு தலை வணங்கி மாகாண முதலமைச்சர்  பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று மாகாண முதலமைச்சராக என்னை நியமித்தது மட்டுமன்றி பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்களையும் ஜனாதிபதி, எனக்கு வழங்கினார்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், ஊவா மாகாண ஆட்சி அமைந்துள்ளது. இன்னும் நான்கு வருட காலங்களுக்கு ஊவா மாகாண சபையானது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் இயங்கும்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .