2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'கால்நடைகளை இறைச்சியாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்'

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை நான் முற்றாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன். அதேவேளை, சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை வெட்டி விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கும் சட்டரீதியாக எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என கால்நடை வளர்ப்பு அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேசத்தில் போபத்தலாவ, மெனிக்பாலம மற்றும் கொட்டகலை ரொசிட்டா இடங்களில் உள்ள கால்நடை பண்ணைகளுக்கு வியாழக்கிழமை (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனை நிவர்த்திக்க புதிய அரசாங்கத்தின் ஊடாக எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஆகவே, எதிர்வரும் காலத்தில் கால்நடை வளர்ப்பு, அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு எனது அமைச்சின் மூலம் நல்லதொரு சேவையை முன்னெடுப்பேன் ' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .