2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிறுபான்மையினர் புறக்கணிப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில்  சிறும்பானமையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள  சிறுபான்மையினத்தவர்களில் ஒரு இளைஞருக்கோ அல்லது யுவதிக்கோ அங்கத்துவம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர் நாடாளுமன்றத்துக்கு  தொகுதி அடிப்படையில் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால்  இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றனர்.   

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்கள்,

'கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள்  இருந்த போதும் 20 பிரதேச செயலக பிரிவுகள் உள்ளன. ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் மூன்று பிரதேச செயலக பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் கலகெதர, பாதத்தும்பறை, பாத்தஹேவாஹெட்ட, கம்பளை, நாவலப்பிட்டி போன்ற தேர்தல் தொகுதிகளில் இரண்டு பிரதேச செயலகம் வீதம் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு இளைஞர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது' என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுபான்மை மக்கள் பறந்து வாழும் பிரதேச செயலகங்கள் இவ் ஏழு பிரதேச செயலகங்களில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .