2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

50 தனிவீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

ஹட்டன்,ஸ்டெதன் தோட்ட புரூட்டில் பகுதியில் 50 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று (31) நடைபெற்றது

இந்த வீட்டத்திட்டத்தில் ஒவ்வொரு வீடும், 7 பேச் காணியில் 550 சதுரஅடியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்கு 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்,மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்  ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் அ.நந்தகுமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .