2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தபால் ரயிலிலிருந்து சடலம் மீட்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா, நானுஒயா 126ஆம் இலக்க தபால் ரயிலிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (01) சடலமொன்றை மீட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய உசாந்த ஜயரத்ன (வயது 47) என்ற நபரினுடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் தபால் ரயிலிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்தின், காற்சட்டைப் பையிலிருந்து எடுக்கப்பட்ட வங்கி சேமிப்பு புத்தகத்திலேயே இவர் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் இவர் கண்டியிலிருந்து கம்பளைக்குச் செல்வதற்கான புகையிரதக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .