Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
தனது மனைவியின் சகோதரியை வெட்டிக் கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்பட்டிருந்த அவரது கணவனை குற்றவாளியாக இனங்கண்ட கண்டி, மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர அவருக்கு மரண தண்டனை விதித்து திங்கட்கிழமை (26) தீர்ப்பளித்தார்.
மாத்தளை, லக்கலையை சேர்ந்த தரங்க சந்தன உதய குமார என்ற 26 வயது நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர், கடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தனது மனைவியின் சகோதரியான சம்பிகா குமாரி என்பவரை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பிலான வழக்கு விசாரணை லக்கலை, நாவுல நீதிமன்றத்தில் நடைபெற்று பின்னர் கண்டி, மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மேற்படி நபரை குற்றவாளியென இனங்கண்ட கண்டி மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago