Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 23 , பி.ப. 03:45 - 1 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக மக்களுக்கு, 100 நாள்களில் 1,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம், தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது என, இந்த வேலைத்திட்டத்தின் பிரதானியும் இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்குள், இவ்வாறு ஒரு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கமைய, பிரதமரின் விசேட செயற்றட்டத்தின் கீழ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.
இதன்பிரகாரம், இதன் முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பாக முதல் 100 நாள்களுக்குள் 1,000 பேருக்கு இதை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் ஏனைய பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
எப்படியும் மூன்றாண்டுகளுக்குள் 1 லட்சம் பேரின் காணி உரிமையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதே, தங்களது இலக்கு என்றும் இதில் நுவரெலியா மாவட்டத்துக்கு 1,200, கண்டி மாவட்டத்துக்கு 830, மாத்தளை மாவட்டத்துக்கு 340 என்று தயார்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்களால், காணி உறுதிப்பத்திரம் என்ற போர்வையில் கடதாசி பத்திரமே வழங்கப்பட்டது. ஆனால், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டபூர்வமான ஆவணத்தையே நாம் வழங்கவுள்ளோம்.
“மலையகத்தில் அமரர் சௌமிமூர்த்தி தொண்டமான், அமரர். ஆறுமுகன் தொண்டமான், அமரர் சந்திரசேகரன் ஆகியோராலும் தனி வீடுகள் அமைக்கப்பட்டன. எனினும், அவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. அந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
“பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி தலைவராக நான் பதவியேற்றபோது, காணி உரிமை என்ற விடயத்தை தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி அவர் தலைமையில் கொட்டகலை ரொசிட்டா பகுதியில், 50 குடும்பங்களுக்கு, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்ப கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விசேட வேலைத்திட்டத்தை முன்டுக்கும் குழு பிரதானியாக அமைச்சர் என்னை நியமித்துள்ளார்” என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
ரெங்கநாதன் சாந்தருபினி Saturday, 19 December 2020 08:40 PM
ஐயா எனது கிராமத்தில் பல பிரச்சினைகள் உள்ளன குறிப்பாக பாடசாலை இன்மை படித்த இளஞ்சர் யூவதிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன அவற்றை நிவர்த்தி செய்து தரும்படி மிகவும் பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐய்யா நனறி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago