2025 மே 17, சனிக்கிழமை

11 மாதங்களில் 50 பேர் உயிரிழந்தனர்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரையான 11 மாதங்களில் மொனராகலை மாவட்டத்தில் வாகன விபத்துகளால் 50 ​பேர் உயிரிழந்துள்ளனர் என மொனராகலை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி எம்.பி.ஏ.எஸ்.அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த 11 மாதங்களில் 462 விபத்துகள் மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமானவர்கள் தலமன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 462 வாகன விபத்துகளில்  50  பேர் உயிரிழந்துள்ளதுடன், 164 ​பேர் பாரிய காயங்களுக்கும் 214 பேர் சிறிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .