2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 மே 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

140 லீற்றர் பெற்றோலை  கொண்டுச் சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் ஹாலிஎல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை ஹாலிஎல நகரிலிருந்து ஊவா கெட்டவெளப் பகுதிக்கு ஓட்டோவில், மரக்கறிகளுடன் 140 லீற்றர் பெற்றோலை மறைத்து கொண்டு சென்ற போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இவர் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றமைக்கு அமையவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர்  இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X