2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

15 வயது சிறுமி சிசுவைப் பிரசவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

காய்யச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக,  வைத்தியசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர், சிசுவை பிரசவித்தச் சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பதுளை வைத்தியசாலையினூடாக, பதுளை பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுளையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வரும் மேற்படி மாணவி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக, அவரது தாயாருடன் பதுளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மாணவியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன் மாணவியை உடனடியாக கர்ப்பிணி விடுதிப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

கர்ப்பிணி விடுதிப் பிரிவில் வைத்தே, மாணவி சிசுவைப் பிரசவித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய   21 வயது இளைஞரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .