2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

150 ரூபாய்க்கு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நுகர்வோர்

R.Maheshwary   / 2022 மே 26 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

16  நாள்களுக்குப் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (26) மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்ட போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 3,300 லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிக்கப்பட்ட நிலையில், இதனைப் பெறுவதற்காக, அதிகாலை தொடக்கம் ஆயிரக் கணக்கான மக்கள் வரிசைகளில் நின்றனர்.

இதன்போது, தலா ஒருவருக்கு 150 ரூபாய்க்கு, ஒன்றரை லீற்றர் மண்ணெண்ணையே விநியோகிப்பட்டதால், நுகர்வோருக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரால் நிலைமை சுமூகமாக்கப்பட்டது.

இதேவேளை சிலர் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்தி, மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதாகவும் வரிசையில் நின்ற பலர் குற்றஞ்சுமத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X