Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
R.Maheshwary / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
60 வயது முழுமையாகப் பூர்த்தியடைந்து ஓய்வுப் பெற்ற ஊவா மாகாணசபைக்குரிய 17 நிறுவனங்களில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மி்ல தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கமைய, ஊவா மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியாஸ், ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் ரோஹித அமரதாச, மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜீவந்த ஹேரத், மாகாண உள்ளக கணக்காய்வு பணிப்பாளர், எஸ். ஜயசிங்க, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ஜே.எம்.சேனாதீர, ஊவா மாகாண கட்டடப் பணிப்பாளர். கங்காநந்தா, ஊவா மாகாண சபை வரவு செலவு திட்ட பணிப்பாளர் சமந்த கித்சிறி ஆகியோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பதுளை பிராந்திய கல்வி பணிப்பாளர் தம்மிக்க ஹேரத், பசறை பிராந்திய கல்வி பணிப்பாளர் சரத் ரணசிங்க, வெலிமடை பிராந்திய கல்வி பணிப்பாளர் சரீனா பேகம், வில்வ பிராந்திய கல்வி பணிப்பாளர் எஸ். திருமதி விமலவீர, பண்டாரவளை பிராந்திய சுற்றுலாப் பணிப்பாளர் சாரங்கி ஹெட்டியாராச்சி, மாகாண கைத்தொழில் பணிப்பாளர் சம்பத் நிஷங்க, மாகாண நன்னடத்தை ஆணையாளர் என். சதுரங்கனி, மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் டி. சம்பத், மாகாண சுகாதார அமைச்சர் ஆர்.எம். தயாரத்ன, மொனராகலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் பி. குமார் ஆகிய 17 பேருக்கே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago