2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2 பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம்

Editorial   / 2022 நவம்பர் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிவா ஸ்ரீதரராவ்  

எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் பஸ் வண்டியும்  இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

மேற்படி சம்பவம் இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்வாடிய பிரதேசத்தில் இன்று(10) காலை இடம்பெற்றது.

 இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியில் பயணித்தவர்களுக்கே அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .