2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

2 வீடுகளுக்குச் செல்வதற்கு 5 இலட்சம் செலவு

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

இரண்டு வீடுகளுக்குச் செல்வதற்காக இரண்டு வீடுகளுக்கு இடையில் சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிரீட் போடப்பட்டுள்ள சம்பவமொன்று ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் புரூட் ஹில் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரிவுக்கு பயணம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இந்த கொங்கிரீட் வீதி, வாகனங்கள் பயணிக்கும் வகையில்
போடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள மக்கள் பயணிக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதாக கூறி, இரண்டு வீடுகளுக்கு இடையில் மட்டும் கொங்கிரீட் போடப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் வசதிக்காக இருந்த படிக்கற்களில் இரண்டொரு படிக்கற்களை மட்டுமே நிர்மாணித்துக் கொடுத்துவிட்டு, இரண்டு வீடுகளுக்கும் இடையில் கொங்கிரீட் போடப்பட்டுள்ளது என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
அந்த வீதியில் பயணிக்கும் போது பல்வேறானா அசௌகரியங்களுக்கு தாம் முகங்கொடுத்து வருவதாகவும் சில விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .