2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

20 நோயாளிகளின் உடலிலிருந்து புழுக்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை வைத்தியசாலையில், சுமார் 20 நோயாளிகளின் உடலிலிருந்து, ஒருவகை புழுக்களை, சத்திர சிகிச்சையின் ஊடாக வெளியேற்றியுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ள மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்த நோயாளர்களின் உடலிலிருந்தே, இவ்வாறு புழுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய பிரதேசங்களுக்கு பரவும் அபாயமுள்ளதெனவும் அவர் கூறினார்.

தம்புள்ள, சீகிரியாவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்தே அதிகமான நோயாளர்கள், வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாகவும் இவர்களை சோதனைக்கு உட்படுத்தும்போது, அவர்களது உடலில் ஒருவகை புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் 20 பேரின் உடல்களிலிருந்து, புழுக்களை வெளியேற்றியுள்ளதாகவும் 3 தொடக்கம் 4 அங்குல நீளமுடைய வெள்ளை நிற புழுக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனவெனவும் அவர் கூறினார்.

மனித உடலில், சில முக்கியப் பகுதிகளில் இருக்கும் இந்த புழுக்கள், செல்களை விட்டுச் செல்வதாகவும் இதற்கூடாக புழுக்கள் மீண்டும் உருவாகுவதாகவும் அவர் கூறினார். இவ்வகையான புழுக்கள், வீட்டு விலங்குகளிடமிருந்தே அதிகம் பரவுகின்றன. இதனால், குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிப்படைகின்றனர் என்று மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .