2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சடலத்திற்குரியவர் இனங்காணப்பட்டார்

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                 (எம்.எஸ்.குவால்தீன்)

கண்டி அஸ்கிரிய மைதானத்திற்கருகில் இன்று அதிகாலை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட  சடலம், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஒருவரினது என  கண்டி சட்ட வைத்திய அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலத்திற்குரியவர் நில்தண்டவரின்னையைச் சேர்ந்த 48 வயதான வை.எம்.எஸ்.குமார என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து, மரண விசாரணை அதிகாரி பிரேத பரிசோதனைக்கு சடலத்தை ஒப்படைக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இறந்தவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் நேற்று கண்டியிலுள்ள தனியார் வைத்திய பரிசோதனை நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றவர் என உறவினர்கள் திடீர் மரண விசாரணையின் போது தெரிவித்தனர்.

உறவினர்களினது சாட்சியங்களையும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் கவனத்திற் கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி, கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரணம் என தீர்ப்பளித்து சடலத்தை பிரேத பரிசோதனையை அடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .