2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அனர்த்த முகாமை தொடர்பாக பாடசாலை சமூகத்திற்கு அறிவுறுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நதீர் சரீப்தீன்)

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் வேலைத் திட்டமொன்றினை ஆரம்பித்திருப்பதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கேணல்.பிரியங்கர அபேரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரியில் வெள்ளம், மண்சரிவு மற்றும் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. அதேவேளை, பாடசாலையில் திடீரென்று ஏற்படும் அனர்த்தங்களை முகங்கொடுப்பது எப்படி என்பது பற்றியும் பாடசாலை மாணவர்களுக்கு போதிய விளக்கம் இல்லை. எனவே தான் அனர்த்தங்கள் தொடர்பாக அறிவுறுத்தல் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .