Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை நுவரெலியா வீதியில் அட்டபாகை சந்தியில் இன்று புதன்கிழமை முற்பகல் துணுகேல்ல பிரதேசவாசிகள் பெளத்த பிக்குகள் சகிதம் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டபாகை சந்தியில் இருந்து துணுகேடல வரையான பாதையை செப்பனிட்டுத் தருமாறு கோரி சுலோக அட்டைகள் ஏந்தியவாறு சுமார் 800 பேர் கம்ளை நுவரெலியா வீதியில் குறுக்காக அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர் எரித்தமையால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
கம்பளை மற்றும் புசல்லாவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முயற்சித்த போதும் பிரதேசவாசிகள் பேராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து, லடபலிர்ந்த பிரதேச செயலக அதிகாரிகள் ஸ்தலத்திற்கு வந்து பாதையை செப்பனிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து பேராட்டம் கைவிடப்பட்டது.
10 minute ago
13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
3 hours ago