2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

Super User   / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                              (எம்.எஸ்.குவால்தீன், மொஹம்மட் ஆஸிக்)


கைது செய்யப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் நால்வரை விடுதலை செய்யக் கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியதுடன் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் கொடும்பவியையும் எரித்தனர்.

கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விஜயம் செய்த போது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரை தடுத்து வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பேராதனை
பொலிஸார் நான்கு பீடங்களைச் சேர்ந்த நானுகு மாணவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

ஆனால், இம்மாணவர்கள் பழி வாங்கும் நோக்கில் தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விளக்க மறியளில் வைத்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000 அதிகமான மாணவர்கள் பங்கு கொண்டனர்.

கண்டி மணிக்கூட்டு கோபுர சந்தியில் மாணாவர்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் கொடும்பாவியை எரித்தனர். இதன் காரணமாக கண்டி நகரின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X