Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் கத்திக்குத்து இலக்காகி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதான கணவர், பின்னர் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கவிரவில தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் குறித்த பெண், விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடீரென பாய்ந்து கவ்வாத்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார்.
இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் நஞ்சருந்தியுள்ளதுடன் தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத் தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்ணாவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
8 hours ago
தமிழ்ன் Friday, 01 October 2010 01:51 AM
தமிழுக்கு அமுதென்று பெயர் தயவுசெய்து புரிந்து கொள்ளவும்
Reply : 0 0
xlntgson Tuesday, 05 October 2010 08:42 PM
தமிழ்=அமிழ்து, அமுது என்பது மருவல். இவர் பருகி அடிமையாகி இருப்பது மது. அதுவும் கரியமலம் & நீராவி நிறைந்த ஸ்பிரிட்-spirit-மது சாரம்.
Reply : 0 0
xlntgson Friday, 08 October 2010 09:50 PM
அமிர்தம் என்பது தேவர்கள் பருகி சாகாவரம் பெற்றதாம். அது தான் முப்பத்து முக்கோடி வானவர்கள் இருக்கின்றனரோ! இதை மது என்று அழைப்பது கூட பாவம். சோம பானம் என்று தான் கூறவேண்டும் .அதை குடித்தால் கூட இம்மாதிரி வன்முறைக்கான வெறி வரும் என்று தெரியவில்லை. கள்ளுண்ணாமையை திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார் இப்போது இருந்தால் கள்ளைக்குடி,கண்டதையும் குடிக்காதே என்று சொல்லுவாரோ,. கள்ளுக்கடைகள் மூடப்பட்டு டாஸ்மார்க் ஆனகதை அவருக்கு தெரியாதல்லவா? தென்னம்பால் குடியுங்கள் என்று தென்னை அபிவிருத்தி சபையில் விளம்பரம் வரும் இனி.
Reply : 0 0
sheen Monday, 11 October 2010 08:27 PM
மலரில்இருப்பதும் மது தான் ஆகையினால் மது என்ற பெயரை சாராயத்துக்கு வைப்பதை நான் ஆட்சேபிக்கின்றேன். மதுரமான தேன் தேனீக்களாலும் வண்ணத்திப்பூச்சிகளாலும் சேகரிக்கப்பட்டு நமக்கு வழங்கப்படாவிட்டால் மகரந்தச்சேர்க்கையும் இல்லை காய்கள் பழங்களும் இல்லை. மது அருந்துகின்றவர்களைப்போல் தேன் அருந்துவோர் அதற்கு அடிமை ஆவது இல்லை. தேன் பலநோய்களுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது இப்போது செயற்கைதேனும் இருக்கிறது அவை நல்ல பலன் கொடுக்கின்றனவா? அதே நேரம் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டு தேனீ கொட்டி சாகவும் கூடாது, பேராசையில்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago