2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

குழந்தையை விற்ற தாய் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம். தாஹிர்)

12 நாள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்றை இருபதாயிரம் ரூபாவிற்கு விற்ற தாயை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். பதுளை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சில நாட்களுக்கு முன் பதுளை மாகாண வைத்தியசாலையில் வைத்து ஆண்குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அக்குழந்தை 12 நாட்களுக்கு பின் திருகோணமலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு விலைபேசி 20,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் தற்போது அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றன. விற்கப்பட்ட குழந்தை நான்காவது குழந்தையாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை வாங்கியவர் தொடர்பில் இதுவரையும் எவ்வித தகவல்களும் இல்லை. பொலிஸார் கைது செய்யப்பட்ட குழந்தையை நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருக்கின்றனர். குழந்தையை தேடி விசேட பொலிஸ் குழு ஒன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X