2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா சேனைகள் அழிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஹப்புத்தளை கொஸ்லன்ந்த அக்கர 100 காட்டுப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, 4 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் சுற்றி வளைப்பின் போது இவைகளை பராமறித்து வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கஞ்சா சேனைகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்று மாலை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .