2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய மூவர் கைது

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக பாதுபாப்பு கடமையிலீடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  நேற்றிரவு 9.30 மணியளவில் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக உள்ள பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த இரு உல்லாசப் பயணிகளை வாகனத்தில் வந்த சிலர் தாக்கியதை அடுத்து சமரசம் செய்ய சென்ற பொலிஸ் சாஜர்ன்ட்டையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் சாஜர்ன்ட் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் வாகனத்தில் வந்த மூவரையும் கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X