Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுரங்க ராஜநாயக்க
மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன சிறுவன் சடலமாக சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 30 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று திங்கட்கிழமை நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே மஹாவலி கங்கையில் நீராடச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago